மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு! அவர்களுக்கு தண்டனை உறுதி-அமைச்சர் ஜெயக்குமார்!
2006-2011 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அந்தியூர் செல்வராஜ் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்ட அவர்கள் சிறைக்கு செல்வார்கள். இதற்கான சிபாரிசு கடிதங்கள் சிக்கியுள்ளன. அதேபோல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய மோட்டார் ஆய்வாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது.
இப்போது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி.யில் தவறுக்கு வழியில்லாத நிலை உருவாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.