திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
8 வயது சிறுவனையும், விட்டுவைக்காத பாலியல் கொடூரம்.! கரூரில் காமுகன் வெறிச்செயல்.!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ சட்டத்தில் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தம் என்கிற அறிவானந்தம். இவருக்கு வயது 28 எலக்ட்ரீசியன் தொழில் செய்து வரும் இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்
இத்தகைய நிலையில், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகாமையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுவனின் தாய் குளித்தலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.