ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு.. இளைஞர் கைது.!
ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவில் வசித்து வருபவர் ச.ராமாஜி (65). இவர் வழக்கம் போல் காலை தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் நடைப்பயிற்சி செய்துள்ளார்.
அப்போது அங்கு வேகமாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞர் ராமாஜியை தாக்கி கீழே தள்ளி விட்டு அவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் கீழே விழுந்து கிடந்த ராமாஜியை மீட்டு அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதனைதொடர்ந்து ராமாஜி இந்த சம்பவம் குறித்து கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகையை மூதாட்டியிடமிருந்து பறித்து சென்றது செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சோந்த நா.விநாயகமூா்த்தி என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை ஆலந்தூா் அருகே காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.