ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு..இளைஞர் கைது..!
தூத்துக்குடி மாவட்டம் சத்யாநகர் பகுதியில் கருப்பசாமி தனது மனைவி நாகஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகஜோதி தனது இரு சக்கர வாகனத்தில் தாளமுத்து நகரில் சென்றுகொண்டிருந்த போது அவரை 2 இளைஞர்கள் பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த இளைஞர்கள் நாகஜோதியின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் நாகஜோதி நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நாகஜோதி முதலுதவி பெற்ற பின் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் தூத்துக்குடி மேட்டுப்பட்டி அர்னால்டு மற்றும் லூர்தம்மாள்புரம் பின்லேடன் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் நகை வழிப்பறி செய்ததை இருவரும் ஒப்புகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பெண்ணிடம் இளைஞர்கள் நகையை வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.