53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
நகைக்கடை ஓனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியில் வசித்து வருபவர் 63 வயதுடைய சேகர், கோபி-சக்தி மெயின் ரோடு, கச்சேரிமேடு பகுதியில் நகைக்கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இவர், இன்று காலை அவரது வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு கொண்டார்.
இதனால், துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மற்றும் மனைவி சேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், உடனே அவரை கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.