உஷார்.. கல்யாண பத்திரிக்கை கொடுப்பது போல் வந்து மர்மநபர்கள் செய்த காரியம்.! கன்னியாகுமரியில் பரபரப்பு!!



Jewellery stolen from the women who live alone

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியில் வசித்து வருபவர் 52 வயது நிறைந்த கீதா. இவரது கணவர் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். மேலும் மகனும், மகளும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியே சென்ற நிலையில் கீதா மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல 2 நபர்கள் வந்துள்ளனர். 

கீதாவும் சொந்தக்காரர்கள் என எண்ணி அவர்களை வீட்டின் உள்ளே வரவழைத்து உபசரித்துள்ளார். பின் அவர்களிடம், நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டநிலையில் அவர்கள் மழுப்பலாக பதில் கூறியுள்ளனர். பின்னர் திடீரென அந்த இரு நபர்களும் கீதாவை தாக்கி அவரது கை,கால்களை கட்டிப்போட்டு, அவர் சத்தம் போடாதவாறு வாயில் துணியை நுழைத்துள்ளனர். பின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 8¾ பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

robbery

பின்னர் சிறிது நேரம் கழித்து கீதா எப்படியோ வாயிலிருந்து துணியை எடுத்துவிட்டு கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரது கை,கால் கட்டுகளை அவிழ்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள் கீதா மற்றும் அக்கம்பக்கத்தினர் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொள்ளையடித்த நபர்கள் குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டில் பெண் தனியாக இருந்தபோது நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.