மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Ex-மிலிட்டரி வீட்டிலேயே கைவைத்த திருட்டு கூட்டம்.. 22 சவரன் நகைகள் கொள்ளை..!
முன்னாள் ராணுவ வீரரின் வீட்டுகதவை உடைத்து 22 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதியம்புத்தூர் நீராவிமேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கனிராஜ். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரின் மனைவி மாலதி. இவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தம்பதியினர் இருவரும் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நீராவிமேட்டில் உள்ள கனிராஜின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் கனிராஜிடம் தெரிவிக்கவே, இதுகுறித்து அவர் புதியம்புத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் வீட்டில் நேரில் சென்று பார்த்து கொள்ளை நடைபெற்றது உறுதி செய்தனர்.
மேலும் வீட்டிலிருந்த 22 சவரன் நகைகள் திருடி சென்றதும் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.