மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.52,400 வரை மாத சம்பளம்! 564 காலியிடங்கள்! யாரும் மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும், தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 20/7/2019 – 10/8/2019 வர இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதர வழிகளில் விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணிகள்: வனக்காவலர் (Forest Watcher)
மொத்த காலியிடங்கள் = 564
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.08.2019
வயது வரம்பு:
1. பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் போன்றோராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
3. முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் (இராணுவப்பணி கழித்தது போக) இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.150
கல்வித்தகுதி:
வனக்காவலர் பணிக்கு, குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கிணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளிக்கல்வி அல்லது கல்லுரிக்கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.forests.tn.gov.in/ மற்றும் https://tnfusrc.in/drfwmay19/ - போன்ற இணையதள முகவரிகளில் ஏதேனும் ஒன்றில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. ஆன்லைன் வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. உடற்திறன் தேர்வு
இது குறித்த முழுத்தகவல்களைப் பெற:
https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Press%20Release-Watcher_Tamil.pdf