மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டூவீலர் - கார் மோதி பயங்கர விபத்து.. மகளின் சுபகாரியத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கச்சென்ற தாய் பரிதாப மரணம்..!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், குமந்தாபுரம் உள்ள உறவினர்களின் வீட்டிற்க்கு மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கான பத்திரிக்கை வைக்க சென்ற பெண்மணி பத்ரகாளி (வயது 36). இவர் தனது மச்சான் மகன் சூர்யா (வயது 23) என்பவரோடு, தனது மகளின் சுபகாரியத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றுள்ளார்.
இருவரும் பத்திரிகை வைத்துவிட்டு குமந்தாபுரம் துர்கா தேநீரகம் அருகில் வந்தபோது, அவ்வழியே சென்ற கார் இவர்களின் டூவீலரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த பத்ரகாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சூர்யாவுக்கு இரண்டு முட்டியிலும் எலும்புகள் உடைந்து உயிருக்கு அலறித்துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் காவல் துறையினர் காரை ஒட்டி வந்த யாசிர் என்பவரை கைது செய்ததில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானது.