மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு நேரம்.! 6 மாத காதல்.! காதலி வீட்டிற்கே சென்று காதலியிடம் கெஞ்சிய காதலன்.! பேச மறுத்ததால் காதலியை குத்தி கொன்ற கொடூரம்.!
கோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். ஐஸ்வர்யா தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த 6 மாதமாக ரித்தீஷ் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததை அடுத்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கி படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். அதன்பிறகு ஐஸ்வர்யா, ரித்திஷ் உடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
பல முறை ஐஸ்வர்யாவுடன் பேச முயற்சித்தும் பேச முடியாததால் ரித்திஷ் நேரடியாக ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு இரவில் சென்றுள்ளார். அங்கு சென்ற ரித்திஷ், ஐஸ்வர்யாவிடம் ஏன் என் காதலை வெறுக்கிறாய். என்னை ஏற்று கொள் என கொஞ்சியுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமான ரித்திஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை குத்தியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு அவரின் தந்தை சக்திவேல் வெளியே வந்துள்ளார். அப்போது ரித்திஷ் சக்திவேலையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அதனை அடுத்து தந்தை, மகள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரித்திஷை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.