சனாதன தர்மத்தை தானும் பின்பற்றி மற்றவர்களுக்கும் கொண்டு சேர்த்த, எளிமையின் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த கக்கன் பிறந்த நாள்.!



kakkan birthday

தமிழக அமைச்சராக மிகவும் எளிமையாக வாழ்ந்தவரை எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால் இன்றுவரை கக்கன் அவர்களை தான் அனைவரும் கூறி வருகின்றனர் காமராஜருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கக்கன் அவர்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

வேளாண்மை, உணவு, மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, உள்ளாட்சித்துறை, கல்வி, நிதி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத்துறை என பெரிய பொறுப்புகளில் அமைச்சராக பதவி வகித்த கக்கன் சென்னையில் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 1981 டிசம்பர் 23 ஆம் நாள் காலமானார் சனாதன தர்மத்தை தானும் பின்பற்றி மற்றவர்களுக்கும் கொண்டு சேர்த்த கக்கன். இந்த நிலையில் இன்று கக்கன் ஐயா அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது புகைப்படங்களை வணங்கியும் பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது டுவிட்டரில் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில், "எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக  நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம்.  தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.