மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏடிஎம் மிஷினை உடைத்து களவாட முயன்ற களவாணி.. காட்டிக்கொடுத்த சட்டை..!
காரைக்காலில் ஏடிஎம் மிஷினை சுத்தியலால் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்காலில் பாரதியார் சாலையில் கரூர் வைசியா வங்கி ஏடிஎம் மெஷின் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷினை ஞாயிற்றுக்கிழமை காலை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த மர்ம நபரால் ஏடிஎம் மெஷின் உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து கரூர் வைசியா வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மர்ம நபரை போலீசார் விசாரித்தனர். மேலும் அந்த நபர் அணிந்திருந்த சட்டையை வைத்து ஏடிஎம் மெஷின் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அந்த இளைஞர் தான் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.