ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#BigBreaking: "என் சாமி போயிருச்சே.. கல்யாண கனவு கருமாதி ஆகியிருச்சே" மருத்துவமனையில் கதறிய சிறுமியின் தாய்..!
கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மகளின் உடலை பெற வந்த தாய் கதறியழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், கனியாமூர் நகரில் செயல்பட்டு வரும் சக்தி இன்டர்நெஷனல் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசமூர் 17 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு பிரேத பரிசோதனை மீண்டும் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பின்னர் மாணவியின் உடலை பெற பெற்றோர்கள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. வன்முறை தொடர்பாகவும், வழக்கு விசாரணை தொடர்பாகவும் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) காலை மாணவியின் உடலை பெற கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியின் பெற்றோர் வருகை தந்தனர். முன்னேற்பாடாக காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிறுமியின் தாய், "என் சாமி, தங்கம், தெய்வமே.., என்னைய விட்டுட்டு போயிட்டியே. உனக்கு கல்யாணம்லாம் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ உனக்கு கருமாதி பண்ற நிலைமையை அந்த கடவுள் கொடுத்துட்டானே. என்னைய இப்படி அழுவ வச்சிட்டு போயிட்டியே. எனக்கு கொள்ளிபோடுவன்னு பாத்தனே, உனக்கு கொள்ளிபோட வச்சிட்டியே. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. என் புள்ள போயிருச்சே. காலம்புல்லா என்ன அழ வச்சிட்டு போயிட்டியே. எனக்குன்னு இருந்த ஒத்த புள்ளையும் போயிருச்சே" என்று காரிலிருந்தவாறு சிறுமியின் உரத்தக்குரலில் கதறி அழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.