அடேங்கப்பா.. 50 வயது தந்தைக்கு காது குத்தி அழகு பார்த்த மகன்கள், உறவினர்கள்... பாசத்தில் பொங்கவைத்த உறவினர்கள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஐம்படை கிராமத்தில் வசித்து வருபவர் மொட்டையன். இவரின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். ஏழுமலையான் மனைவி சங்கீதா (வயது 45).
தம்பதிகளுக்கு வேடியப்பன் (வயது 22), மணி (வயது 20) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஏழுமலைக்கு சிறுவயதில் இருந்து காது குத்தவில்லை.
இதனை தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வேதனையுறவே, ஏழுமலையின் மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஏழுமலைக்கு காதுகுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, இவர்களின் குலதெய்வம் உள்ள ஐம்படை கிராமத்தில் வைத்து ஏழுமலையின் மாமா மடியில் அவரை அமரவைத்து மொட்டையடித்து காது குத்தப்பட்டது.