மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்.. பேரதிர்ச்சி தகவல் வெளியானது.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சிறுமி தற்கொலை விவகாரத்தில், விடுதி அனுமதியின்றி செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், சக்தி இன்டர்நெஷனல் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டம் வேப்பூரை சார்ந்த 17 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், பெற்றோரின் தரப்பில் இது மர்ம மரணம், தங்களின் மகள் தற்கொலை செய்யவில்லை என்று தெரிவித்தனர்.
இதனால் 3 நாட்களுக்கும் மேல் தொடர் போராட்டம் நடந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினரின் போராட்டம் காவல் துறையினரால் கலைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையில் பொது மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. திங்கள்கிழமை மாணவியின் பெற்றோர் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மறுபிரேத பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் மாணவியின் பெற்றோர் கலந்துகொள்ளாத நிலையில், சிறுமியின் தற்கொலை விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவி மாடிக்கு செல்வதாக இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில், சக்தி இன்டர்நெஷனல் பள்ளியில் ஆய்வு செய்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பல பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான பேட்டியில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் விடுதி அனுமதி என்று இயங்கி உள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அல்லது பள்ளி கல்வித்துறையிடமும் உரிய அனுமதியில்லாமல் பள்ளி விடுதியானது இயக்கப்பட்டுள்ளது. விடுதி சட்டத்தின் படி அது பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாத தங்கும் விடுதியில் 24 பெண்களை சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தங்க வைத்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களை வைத்து விடுதி நடத்தி வரும் ஒவ்வொருவரும் அதனை பதிவு செய்ய வேண்டும். இது அனைவருக்கும் ஒரு பாடம். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதியாக இருந்தாலும், தனியார் பாதுகாப்பு மையமாக இருந்தாலும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள விடுதி என எதுவாக இருந்தாலும் அது பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Title Image: Saraswathi Rangasamy - Minor Girl Respectative - Letter