சக்தி இன்டர்நெஷனல் பள்ளி கொளுத்தப்பட்டதற்கு காரணம் இதுதான்.. பரபரப்பு தகவல் வெளியானது.. தாளாளரின் வன்மத்தீ..!
கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு பள்ளியின் தாளாளர் மீது இருந்த வன்மமே என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது கடனுக்காக பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை கேள்வி கேட்டதற்கு, கேப் கிடைத்தும் மொத்தமாக ரிவெஞ்ச் எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், பெரியநெசலூர் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் கனியாமூர் சக்தி இன்டர்நெஷனல் பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவாறு பயின்று வந்த சிறுமி, கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடந்து வந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி மாணவர் அமைப்பினர் நீதிகேட்டு நடத்திய போராட்டம் வன்முறைக்கு சென்றது. இதனால் பள்ளியின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது. காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டோர் வீடியோவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கலவரக்காரர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும் காவல் துறை அதிகாரிகள் குழு பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அம்பலமானது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி தெரிவிக்கையில், "பள்ளியை எப்படியாவது சேதமடைய செய்ய வேண்டும் என்பதே கலவரக்காரர்கள் நோக்கம். இந்த கும்பல் மாணவியின் இறப்பை பகடைக்காயாக வைத்து போராட்டம் நடத்தி வன்முறை ஆக்கியுள்ளது.
இதற்கு காரணம் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் மீதான வெறுப்பு. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் கடனில் தவித்துள்ளார். கடனை ஈடு செய்ய பெற்றோரிடம் கல்வி கட்டணத்தை அதிகமாகவும், கண்டிப்புடனும் வசூல் செய்துள்ளார். அதனைப்போல, எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடை கொடுக்காமல் வம்பு வளர்த்துள்ளார். சிறிய அளவில் முதலில் தொடங்கிய பள்ளி, பின்னாளில் கடன் வாங்கி பெரிதாக்கப்பட்டுள்ளது.
கடனில் தவிப்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் கேட்கும் போது பணம் கொடுக்காமல் இருந்ததால் அரசியல் கட்சியினர் இடையே பகை எண்ணம் வளர்ந்துள்ளது. இதனால் கலவரக்காரர்கள் திட்டமிட்டு பள்ளியை சேதப்படுத்தி கிடைத்த பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் பொருட்களை ஒப்படைக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்" என்று தெரிவித்தார்.