மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல்; மருத்துவமனையில் அனுமதி.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. செங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி, தமிழ்நாட்டின் பிரதான சுங்கச்சாவடிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
இந்நிலையில், இன்று கத்தியுடன் சுங்கச்சாவடிக்கு வருகைதந்த மர்ம நபர் ஒருவர், சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் வந்ததால், மர்ம நபர் தப்பிச்சென்றார்.
பின் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.