மறுபிரேத பரிசோதனைக்கு வராத ஸ்ரீமதி பெற்றோர்... மாணவியின் வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ்...



 Kallakurichi srimathi matter paste notice on srimathi house

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் தந்தை மனுதாக்கல் செய்திருந்த நிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மறுபிரேத பரிசோதனையின் போது, மாணவி ஸ்ரீமதியின் தந்தை உடனிருக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மறுபிரேத பரிசோதனைக்கு ஸ்ரீமதியின் தந்தை வரவில்லை.

Kallakurichi

நேற்று மதியம் 1.45 மணிக்கு மாணவி ஸ்ரீமதியின் உடல் எக்ஸ்ரே அறைக்கு கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பின்னர், மாலை 3.45 மணிக்கு துவங்கிய மறுபிரேத பரிசோதனை இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. அதில் மருத்துவர்கள் கீதாஞ்சலி, ஜூலியானா ஜெயந்தி, கோகுலராமன், தடயவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருந்தனர். ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் மட்டும் வரவில்லை.

அதன்பின்னர் மாணவியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அங்கு மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்து விட்டதாகவும், நல்லடக்கம் செய்ய மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறும் மாணவி ஸ்ரீமதியின் வீட்டு கதவில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள்.