மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிப்பாவி.. பெண்கள் உடை மாற்றுவதை படம்பிடித்த பெண்.. ஜவுளிக்கடையில் பகீர்.! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் ஓராண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிரெண்ட்ஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று கடைக்கு 2 பெண்கள் துணிவாக வந்த நிலையில், தங்களின் ஆடை சரியாக உள்ளதா? என்பதை சோதிக்க டிரையல் ரூமுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அங்குள்ள ஏ.சி பாயிண்டில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் அதனைக்கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து, அருகே இருந்த பெண் ஏ.சி பாயிண்டில் இருந்த செல்போனை எடுத்து வெளியே வந்துள்ளார்.
இதனைக்கண்ட கடை ஊழியர்கள் பெண்ணை மடக்கிப்பிடித்து திருக்கோவிலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.