திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் துள்ளத்துடிக்க உயிரிழப்பு.. மருத்துவமனைக்கு ஆப்படித்த அதிகாரிகள்.!
தியாகதுருகத்தில் அஸ்வினி மருத்துவமனை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் நகரில் அஸ்வினி தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அங்குள்ள கூவாது கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்ற பெண்மணி கருக்கலைப்பு செய்ய அனுமதியாகியுள்ளார்.
அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதியில்லாத நிலையில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக தெரியவருகிறது. இதனால் பெரியநாயகி அதிக இரத்தம் வெளியேறி உயிரிழந்துவிடவே, குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மருத்துவமனை நிர்வாகம் முறையான சான்றிதழே இல்லாமல் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை அறிந்த அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டதன் பேரில், இன்று மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.