மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமாதியை கூட விட்டுவைக்காத திருட்டு கும்பல்.. நடந்த பகீர் சம்பவத்தால் பதறியபடி ஓடிவந்த உறவினர்கள்..! சமாதினு கூட பார்களையே..!!
ஜோதிடரின் நினைவாக குடும்பத்தினர் கட்டிவைத்த சமாதியை உடைத்து மர்ம நபர்கள் விளக்கை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அரசூர், ஸ்ரீராம் நகரில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி. இவர் ஜோதிடராக பணியாற்றி வந்தவர். வயது மூப்பால் கலியமூர்த்தி உயிரிழந்துவிட்ட நிலையில், அரசூர் ஆற்றங்கரை பகுதியில் இவரின் சமாதி உள்ளது. இந்த சமாதியில் அவரது குடும்பத்தினர் சார்பாக விளக்கு ஒன்று அமைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், மர்ம நபர்கள் சமாதியில் இருந்த விளக்கை உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் சமாதி சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு, அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நேரில் வந்தவர்கள் சமாதி உடைக்கப்பட்டு விளக்கு திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சமாதியில் உள்ள விளக்கை கூட திருடர்கள் திருடி சென்றது, அங்கு கூட ஒருவரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.