8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
சாலையோரத்தில் கிடந்த ரூ.89,500 பணம்.. காவல் நிலையத்தில் ஒப்படைத்த நண்பர்கள்.. உளுந்தூர்பேட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்.!
கேட்பாரற்று சாலையோரம் இருந்த பையில் பணம், ஆவணங்கள் இருக்க அதனை காவல் நிலையத்தில் நண்பர்கள் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, எ.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரின் நண்பர் காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்.
இவர்கள் இருவரும் நேற்று உளுந்தூர்பேட்டை சாலையில் வரும்போது, அங்கு பை ஒன்று கிடந்துள்ளது. யாரேனும் தவறி விட்டு சென்று இருக்கலாம் என்று அதனை சோதித்தபோது, பையில் ரூ.89,500 பணம் இருந்துள்ளது.
மேலும், தனியார் பள்ளியின் ஆவணம், வங்கிபுத்தகம், காசோலைகள் போன்றவையும் இருந்துள்ளன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பணம் மற்றும் ஆவணங்களை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட எல்லைக்குள் இருக்கும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்றவர்கள், விஷயத்தை கூறி கைப்பையை ஒப்படைத்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கி சிறப்பித்தனர்.
பணத்தை கண்டால் பிணம் கூட வாயை பிழைக்கும் என்பதை போல இல்லாமல், பிறரின் உழைப்பை மதித்து உழைப்பே உயர்வு தரும் என வழிய கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க காவல் நிலையத்தை அணுகிய நண்பர்களின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.