மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேட்டை செய்யும் எச்.எம்-மின் கொட்டத்தை ஒடுக்கிய அதிகாரியிடம் ரகளை.. போதை தலைமை ஆசிரியர் பகீர் சம்பவம்.!!
குடிபோதையில் பள்ளிக்கு நினைத்த நேரத்தில் வருகை தந்து சம்பளத்தின் தின்று கொழுத்த தலைமை ஆசிரியரின் கொட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுத்த அதிகாரியிடம் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேப்புலியூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர். இவர் சரிவர பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.
மேலும், பள்ளிக்கு வருகை தந்தால் மதுபோதையில் தான் வருவார் என்றும் கூறப்படுகிறது. பள்ளிக்கு வருகை தாராமலேயே வருகை பதிவேடை சமர்ப்பித்து வந்துள்ளார். இந்த விஷயம் அதிகாரிகளுக்கு தெரியவந்து சம்பளம் பிடித்தம் செய்யப்ட்டுள்ளது. சம்பவத்தன்று வட்டார கல்வி அலுவலர் ஆய்வுக்கு சென்றுள்ளார்.
சம்பள பிடித்தம் காரணமாக ஆத்திரத்தில் இருந்த தலைமை ஆசிரியர் சேகர், மதுபோதையில் வட்டார கல்வி அலுவலர்களை அடிக்க பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். மேலும், அலுவலக மேஜையில் இருந்த பதிவேடை தூக்கி அதிகாரியின் மீதும் வீசினார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.