3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
3 மாதங்கள் இருட்டில் தவித்த மூதாட்டி; மின்வாரிய ஊழியரின் நெகிழ்ச்சி செயல்.. துளிர்விடும் மனிதத்தால் குவியும் பாராட்டுக்கள்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் மின்னிணைப்பு ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர். அப்போது, மாணிக்கவேல் என்ற மின்வாரிய ஊழியர், அங்குள்ள பழைய வீட்டிற்குள் சென்று மின்னிணைப்பை சோதனை செய்ய சென்றுள்ளார்.
அங்கு 90 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வந்த நிலையில், அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது மூதாட்டிக்கு மகன், மகள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்ட நிலையில், தங்களின் குடும்பத்தோடு இருக்கிறார்கள். தாயை கவனிப்பது இல்லை.
இதனால் தன்னுடன் இருக்கும் பூனைக்குட்டியுடன், தன்னால் இயன்ற உணவை சமைத்து சாப்பிட்டு வந்த மூதாட்டியின் மின்விளக்கு 3 மாதமாக எரியவே இல்லை. குழந்தைகளின் ஆதரவு இல்லாததால், சிறிய காமாட்சி விளக்கு வெளிச்சத்திலேயே இரவு நேரத்தில் மூதாட்டி இருந்துள்ளார்.
மின்னனைப்பை சோதனை செய்ய வந்த அதிகாரிகள் மூதாட்டியின் நிலைமையை கண்டு கண்கலங்க, மின்விளக்கை சோதனை செய்து பார்க்கும்போது அது செயலிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தங்களின் செலவில் மின்விளக்கு புதிதாக ஒன்றை வாங்கி கொடுத்தனர். வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த மின்விளக்கு பிரச்சனையும் சரி செய்யப்பட்டது.
இந்த செய்தியை அவர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து விஷயம் தெரியவந்துள்ளது. அடுத்தமுறை அந்த பக்கம் செல்லும்போது, மூதாட்டிக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கிவிட்டு வர வேண்டும் என்றும் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
நன்றி: Sivaraman Ayyam Perumal