திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ட்ரெண்டிங் மாணவி வசந்தியின் கல்லூரி கட்டண செலவை ஏற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன்..! இதுவல்லவோ விடியல்..!
கல்வி கட்டணத்திற்காக கால்கடுக்க சுங்கச்சாவடியில் நின்றுகொண்டு முந்திரிகளை விற்பனை செய்த மாணவியின் கல்விச்செலவை அமைச்சரின் மகன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, பவழங்குடி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வசந்தி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கல்லூரி கட்டணம் செலுத்த இரவு நேரத்தில் தந்தையுடன் முந்திரி பருப்புகளை விற்பனை செய்து வந்தார். அப்போது, விவசாய குடும்பத்தை சேர்ந்த அவரின் வீட்டில் மொத்தம் 4 பெண் பிள்ளைகள் என்ற வசியம் தெரியவந்தது.
படிக்கும்போதே பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்த வசந்தி, அவ்வப்போது விவசாய பணிகளையும் செய்து வந்துள்ளனர். தற்போது வசந்தி தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவர் கல்லூரி கட்டணம் செலுத்த இயலாமல் தவித்துள்ளார். அதனால் வேலை பார்த்தாவது படிக்கச் வேண்டும் என முடிவெடுத்து, தனது தந்தையுடன் முந்திரி பருப்பு விற்பனை செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த வீடியோ வெளியாகி தமிழகமெங்கும் வைரலானது. பலரும் அவருக்கு உதவி செய்வதாக கூறினர். இந்நிலையில், கல்லூரி மாணவி வசந்தியின் விடீயோவை பார்த்த திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தான், மாணவியின் கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொவதாக தெரிவித்தார். மேலும், நடப்பு ஆண்டுக்கான கல்லூரி கட்டணம் ரூ.22,500 பணத்தையும் ரொக்கமாக மாணவிக்கு வழங்கி நன்றாக படிக்கச் வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.