மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி அடித்தே கொலை; கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, புல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரமணி. இவர் விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். ரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூரை சேர்ந்த நபரை திருமணம் செய்தார்.
திருமண வாழ்க்கைக்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ரமணி தனது கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இதனிடையே, பாண்டூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் ரமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கமாக மாறி இருக்கிறது.
புதிய வாழ்க்கை தொடக்கம்
ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த அசோக், ஒருகட்டத்தில் ரமணியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பின்னர் 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இதனிடையே, அசோக் வேறு விழா பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது கணவன் - மனைவி சண்டை ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: போதையில் மனைவியை கொல்ல முயன்ற கணவர்; இறுதியில் பரிதாப பலி.. குடிகாரனால் பத்ரகாளியான பெண்.!
சம்பவத்தன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக ரமணியின் தயார் அழைப்பை மகள் ஏற்கவில்லை, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமணியின் தாய், மகளின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. பதறிப்போன ரமணி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
மனைவி அடித்துக்கொலை
அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரமணி கட்டிலுக்கு அடியில் சடலமாக இருந்துள்ளார். அவரது கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகள், வீடு உட்பட முக்கிய பத்திரங்கள் மாயமாகியது தெரியவந்தது. பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரமணியை அசோக் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அசோக் தனது மனைவியை கொலை செய்த பின்னர், குழந்தைகளை தனது தாயாரின் பொறுப்பில் விட்டுவிட்டு தப்பிச்சென்று இருக்கிறார். இதனால் தலைமறைவான அசோக்கை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சரக்கு வாங்கிக்கொடுக்காத கணவரின் கழுத்தை நெரித்துக்கொலை.. நள்ளிரவில் பகீர் சம்பவம்.!