திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிவேக பயணத்தால் சம்பவ இடத்திலேயே சாவு; பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து.. இளைஞர் உயிரிழப்பு.!
சாலைகளில் பயணம் செய்யும்போது மிதமான வேகமே நம்மை பத்திரமாக வீடு சேர்க்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட். இவர் இன்று தனக்கு சொந்தமான இருசக்கர விலையுயர்ந்த த.நா 77 ஜெ 1530 பதிவெண் கொண்ட வாகனத்தில் திருநாவலூர் - பண்ரூட்டி சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
அச்சமயம் கடலூர் நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று பயணம் செய்தது. இளைஞர் வெங்கட் உளுந்தூர்பேட்டைக்கு முன்பு பேருந்தின் எதிர்திசையில் வந்துள்ளார்.
அதிவேகத்தில் வாகனம் இயக்கப்பட்டதாக தெரியவரும் நிலையில், எதிர்பாராத விதமாக கடலூர் நோக்கி பயணித்த அரசு பேருந்தின் முன்புறத்தில் பயங்கர வேகத்தில் மோதி விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் இளைஞர் வெங்கட் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
இளைஞரின் அதிவேக பயணத்தை உறுதி செய்யும் வகையில், பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்து இருக்கிறது. இதன் வாயிலாக இளைஞர் வேகத்தில் சென்று பேருந்தில் மோதியதும் உறுதியாகியுள்ளது.