திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆபத்தான வகையில் பைக்கில் சாகசம்: கொத்தாக வீடியோ பதிவிட்டவரை அலேக்காக தூக்கிய காவல்துறை.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி இருசக்கர வாகனத்தை அபாயகரமான முறையில் சாகசம் செய்தவாறு இளைஞர் ஒருவர் இயக்கி வந்தார். இது தொடர்பான வீடியோ அவரின் நண்பரால் பதிவு செய்யப்பட்டு பதிவிடப்பட்டது.
இந்த வீடியோ காவல்துறையினர் கவனத்திற்கு செல்லவே, விசாரணை நடத்திய அதிகாரிகள் வாகனத்தின் பதிவினை கொண்டு வாகனத்தின் உரிமையாளரான கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏமப்பேர் கிராமத்தைச் சார்ந்த சாந்தி பூஷன் என்பவரை கண்டறிந்தனர்.
இவரது மகன் நிதிஷ்குமார் (வயது 24) என்பவரிடம் விசாரணை நடந்தது. அப்போது தனது நண்பரான திருச்சி, மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் தரனேஷ் (வயது 20) வாகனத்தை இயக்கியது தெரியவந்தது.
இதனை அடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தரனேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்ற சாகசங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.