#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த மு.க.ஸ்டாலின்? மகிழ்ச்சியில் கமல் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் கட்சியாக இருப்போம் என்று கமலின் மக்கள் நீதி மய்யம் கூறி வருகிறது. அக்கட்சியும் 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் அக்கட்சி தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் நடைபெற்றது. அதில், குடும்பத்த தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும் போன்ற பல திட்டங்களை அறிவித்தார்.
எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2021
இதைக் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர், திமுகவின் தேர்தல் அறிக்கைகள் பல அப்படியே எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தது போன்று உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்தநிலையில், கமல்ஹாசனும், அவரது டுவிட்டர் பக்கத்தில், "எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.