மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மன்னார்குடியை பூர்விகமாக கொண்டவரின் பேத்தி அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்! நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்சும் போட்டியிடுகின்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையையும், துணை அதிபராகும் முதல் இந்திய-அமெரிக்க-ஆஃப்ரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார். கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார்.
கமலா ஹாரிஸ் இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் என்பதும், தங்கள் கிராமத்தை சேர்ந்தவரின் பேத்தி, இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவது பற்றிய தகவல் அறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.