லஞ்சம் பெறுவதில் அரசு எவ்வழி - அதிகாரிகள் அவ்வழி.! கமல்ஹாசன் பரபரப்பு ட்வீட்.!
தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்திருந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி" என பதிவிட்டுள்ளார்.