96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உங்களுக்கு வந்தா இரத்தம்., எங்களுக்குன்னா தக்காளி சட்னியா? - கனல் விவகாரத்தில் "கனல்" அண்ணாமலை..!
திமுக தனது தரப்பு ஆட்களுக்கு என்றால் ஒரு நியாயமும், மற்றொரு தரப்பு என்றால் ஒரு நியாயமும் வைத்து செயல்படுவதாக அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்தார்.
சென்னையில் உள்ள மதுரவயலில் நடைபெற்ற இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் பேசிய திரைப்பட சண்டைக்காட்சி கலைஞர் மற்றும் இந்து முன்னணி கலை இலக்கிய மாநில தலைவர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியாரின் சிலை உடைக்கப்படும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்த பேச்சு ஈ.வெ இராமசாமியின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கனல் கண்ணின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "திமுகவின் அராஜகப்போக்கு தொடருகிறது. அவர்களுக்கு என்றால் ஒரு நியாயம்., ஊருக்கு ஒரு நியாயம். தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை இன்றுவரை கைது செய்யவில்லை. மறுபுறம் கனல் கண்ணனின் பேச்சுக்கு கைது நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக கருத்து சுதந்திரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து, மக்கள் விரோத போக்கை உணர்த்தியிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு, உங்களுக்கு வந்தால் இரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்பதை போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.