2 பேர் கும்பலால் பெண் பலாத்காரம், வீடியோ எடுத்து கொடுமை.. கிருஷ்ணகிரி மலையில் நடந்த பகீர் சம்பவம்.!



in Krishnagiri 2 Youth Raped girl 

 

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் இருக்கும் மலையில், அடைந்த பிப். 19ம் பிற்பகல் சுமார் 3 மணியளவில், இருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது ஆண், 30 வயது பெண் சென்றனர். மலை உச்சிக்கு இவர்கள் சென்றபோது, அங்கு மதுபோதையில் 4 இளைஞர்கள் இருந்ததை பார்த்தனர். இந்த கும்பல் பெண்ணிடம் இருந்த தங்க நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கத்தி முனையில் பறித்துக்கொண்டார். 

கூட்டுப்பாலியல் பலாத்காரம்

பின் இளம்பெண்ணை மிரட்டி 4 பேர் கும்பலில் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இருவர் அக்கொடூரத்தை வீடியோ எடுத்து இருக்கின்றனர். ஆண்-பெண் இருவரும் அழுதபடி சோர்வுடன் வந்ததைக்கண்ட மக்கள் அவர்களிடம் விசாரித்தபோது நடந்த விஷயத்தை கூறிவிட்டு, புகார் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றனர்.இந்த விஷயம் குறித்து கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரைக்கு தகவல் தெரியவரவே, அவர் தம்பதியின் விபரத்தை சேகரித்து விசாரணை நடத்த உத்தரவிட்டன்பேரில் புகாரும் பெறப்பட்டது. 

இதையும் படிங்க: கற்களால் தாக்கி நகை, செல்போன், பணம் பறிப்பு.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. 3 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!

Krishnagiri

4 பேரும் கைது, ஒருவர் சுட்டுப்பிடிப்பு

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறைனர் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் கலையரசன் (வயது 21), அபிஷேக் (வயது 20), பெண்ணிடம் அத்துமீறிய சுரேஷ் (வயது 22), நாராயணன் (வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது சுரேஷ், நாராயணன் ஆகியோர் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டனர். இதனால் சுரேஷின் வலது காலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பிடிக்கப்பட்டார். நாராயணன் தவறி விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிந்தது.

காயமடைந்த காவலர்கள் குமார், விஜயகுமார் கிருஷ்ணகிரி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ரூ.4000 கொடுப்பா.. லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் அதிரடி கைது.!