மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழும் மனித நேயம்! உயிரையும் காப்பாற்றி 69 லட்சத்தை பாதுகாப்பாக அளித்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள்; குவியும் பாராட்டு.!
சென்னை மாதவரம் பகுதியில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து தொழில் செய்து வருகிறார் வியாபாரி ஒருவர். அவர் தன்னிடம் பணியாற்றும் பணியாளர்களிடம் வேலூர் மாவட்டம் வரை சென்று வரவேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்து வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி மூன்று பேர் ஒரு காரில் பயணம் செய்து 69 லட்சம் வசூல் செய்து வந்துள்ளனர். காஞ்சிபுரம், சின்னையன் சத்திரம் வழியாகத் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக அவர்கள் பயணம் செய்த காரின் டயர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கார் குப்புற கவிழ்ந்து அதில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட அவ்வழியாக பயணம் செய்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அந்த இருவரையும் காப்பாற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பிறகு காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்தானம் மற்றும் மருத்துவ உதவியாளர் விஜயன் சென்றனர். அப்போது விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த 69 லட்சத்தையும் சிந்தாமல் சிதறாமல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களுடைய இந்த அருமையான செயலுக்கு காவல்துறை அதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் இதனை அறிந்த மக்கள் பலரும் கொள்ளையடிப்பதற்காக விபத்துக்களை ஏற்படுத்தும் இக்காலத்தில் அம்புலன்ஸ் பணியாளர்களின் இந்த உதவி வியப்பளிப்பதாக தெரிவித்து வெகுவாக பாராட்டினர்.