மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி, குழந்தைகள் கண்முன் தந்தை நெஞ்சில் மிதித்து கொலை.. நடந்த பயங்கரம்.!
குழந்தைகள் மற்றும் மனைவி கண்முன்னே தந்தை ஓட்டுநர் ஒருவனால் அடித்தே கொல்லப்பட்ட பயங்கரம் சென்னையை அதிரவைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி கன்னிவாக்கம் குந்தன் நகரை சார்ந்தவர் உமேந்தர் (வயது 33). இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பவ்யா. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்ற நிலையில், மாலையில் மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப வாடகை ஓலா ஆப் மூலம் கார் முன்பதிவு செய்துள்ளார்.
பிரபல வணிக வளாகம் முன்பு கார் வந்ததும் ஓடிபி எண்ணை கூறுவதில் ஓட்டுநர் ரவிக்கும், உமேந்தருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது, மனைவியின் அக்கா தேவப்பிரியாவின் செல்போனிலிருந்து உமேந்தர் காரை முன்பதிவு செய்து இருக்கிறார். காரில் ஏறியதும் ரவி ஓ.டிபி கேட்க, அதனை எடுக்க உமேந்தர் தடுமாறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவி சண்டையிட்டு ஆர்டரை கேன்சல் செய்ய வைத்துள்ளார்.
காரை கேன்சல் செய்துவிட்டு அமைதியாக இருந்த நிலையில், காரில் இருந்து இறங்கும்போது உமேந்தர் சற்று வேகமாக கதவை சாற்றியுள்ளார். இது ரவிக்கு ஆத்திரத்தை வரவழைத்து இருவரும் சண்டையிட்டுள்ளனர். இந்த சண்டையில் ஆவேசத்தில் உச்சத்திற்கு சென்ற ரவி உம்மந்தரை நெஞ்சில் மித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த துயரம் குழந்தைகள் மற்றும் மனைவி கண்முன்னே நடந்துள்ளது.
இந்த விசயம் தொடர்பாக கேளம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த கொடூர ஓட்டுநர் ரவியும் கைது செய்யப்பட்டுள்ளான்.