மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவனுக்கு ஓரினசேர்க்கை பாலியல் தொல்லை; 4 பேர் கைது..! பரபரப்பு தகவல்..!
விருகம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிய நிலையில், சிறுவனின் பெற்றோரிடம் பரபரப்பு தகவலை தெரிவித்ததை தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரணிபுத்தூரில் ரவிக்குமாருக்கு சொந்தமான மறுவாழ்வு மையம் நடந்து வருகிறது. இந்த மையத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுவன், தனது பெற்றோரால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சில நாட்களிலேயே ஓட்டம் பிடித்த நிலையில் மறுவாழ்வு மையத்தில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், ஓரினசேர்கையில் ஈடுபட வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் ரவிக்குமார், உதவியாளர்கள் கார்த்திக், ஜெகன், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.