மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 'டீ' குடிக்கச்சென்ற கேப்பில் 'தீ'க்கு இரையான வாகனம்; நடுரோட்டில் பயங்கரம்.!
ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்கச்சென்ற நிலையில், வாகனம் தீக்கு இரையானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள சென்னை - அரக்கோணம் சாலையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனியார் லாரி இரும்பு பொருட்களை ஏற்றி வந்துள்ளது.
இடையில், மானூர் அருகே ஓட்டுநர் தேநீர் குடித்து வருவதற்கு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டும் பலனில்லை. இதனால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், வாகனத்தின் முன்புறம் முற்றிலும் எரிந்து தீக்கு இரையானது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.