மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபசாரத்தில் ஈடுபட்ட மனைவியை கள்ளகாதலியுடன் சேர்ந்து கொலை செய்த கணவன்.. அதிர்ச்சியை தந்த பரபரப்பு வாக்குமூலம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 22). இவர் கடந்த 23 ஆம் தேதியில் ஸ்ரீபெரும்புதூர், தெரேசாபுரம் முட்புதரில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பிரியா, விபச்சார புரோக்கர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. சதேகத்தின் பேரில் பிரியாவின் கணவர் நவீன்குமாரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்தபோது, பல பரபரப்பு தகவலும் வெளியானது. மேலும், நவீனின் கள்ளக்காதலி கல்பனாவும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த வாக்குமூலத்தில், "பிரியாவிற்கும் - எனக்கும் பிறந்த குழந்தை இறந்தது. இதனால் அவர் தடம்மாறி சென்ற நிலையில், விபசாரத்தில் ஈடுபட தொடங்கினார். அது எனக்கு பிடிக்கவில்லை. இதற்குள் எனக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்த கல்பனாவோடு தொடர்பு ஏற்பட, நாங்கள் சேர்ந்து வாழ தொடங்கினோம்.
மனைவி பிரியா விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தது பிடிக்காத காரணத்தால், அவரை பலமுறை கண்டித்தும் பலனில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரியா கல்பனா மற்றும் அவரது சகோதரரை கஞ்சா கேசில் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
இந்த விஷயம் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, பிரியாவை நானும், கல்பனாவும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தோம். அவரை எங்களுடன் அழைத்துச்சென்று மதுபானம் அருந்த வைத்து, போதையில் இருந்தவரை இருவரும் சேர்ந்து கொலை செய்தோம். நள்ளிரவில் தெரேசாபுரம் அருகே உடலை வீசி வந்த நிலையில், அதிகாரிகள் எங்களை கைது செய்துவிட்டனர் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் மற்றும் கள்ளக்காதலி கல்பனாவை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.