மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆயுதப்படை காவலர் தற்கொலை விவகாரம்: கந்து வட்டி அனிதா அதிரடி கைது..!
கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் (27) என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கடந்த 1ம் தேதி விஷம் குடித்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காவலர் தற்கொலை விவகாரத்தில் அனிதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புவனகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா, செல்வகுமாருக்கு ரூ. 5 லட்சம் மட்டும் கடனாக அளித்திருந்த நிலையில், வட்டியுடன் சேர்த்து ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டியதால் காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.