மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா? அதிரடியாக கேள்வியெழுப்பிய திமுக எம்பி கனிமொழி!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி “என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக முகமது பாஷா, நவீன், சிவா, சின்ன கேசவலு ஆகிய நான்கு கொடூர கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கால்நடை மருத்துவ பெண் கொலை வழக்கில் 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார்அழைத்து சென்றபோது, குற்றவாளிகள் நான்கு பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகளை போலீசார், சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தண்டனை சரியானது என ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக எம்.பி.கனிமொழி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பலருக்கு மகிழ்ச்சி தரும். இந்தநிலையில் நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. ஆனால், என்கவுண்ட்டர்தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது என தெரிவித்துள்ளார்.