மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோழி இறைச்சியை குடியிருப்பு பகுதியில் கொட்ட முயற்சி.. சிறைபிடித்த மக்கள்.!
குமரி பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைப்பகுதியில், கேரள மாநிலத்தின் இறைச்சிக்கழிவுகள் சாலையோரங்களில் கொட்டி செல்லப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பரம்பை பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளது.
இதனால் உள்ளூர் மக்கள் தங்களின் குடியிருப்பு வளாக பகுதியில் விடியவிடிய கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இரவு சரக்கு வாகனத்தில் வந்த இளைஞர்கள் இறைச்சி கழிவுகளை கொட்ட முயற்சித்துள்ளனர். இதனைக்கண்ட பொதுமக்கள் விரைந்து சென்று வாகனத்தை சிறைபிடித்தனர்.
மேலும், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.