திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதர - சகோதரிகள்; கன்னியாகுமரியில் நடந்த சோகம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல், வில்லுக்குறி சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாபு (வயது 46). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் சகோதரிகள் ஸ்ரீதேவி (வயது 44), உஷா பார்வதி (வயது 38).
இவர்கள் மூவருக்கும் தற்போது வரை திருமணம் ஆகவில்லை என்பதால், மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலை நேரத்தில் இவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் இரணியல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்கையில், சகோதர - சகோதரிகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். உஷா தரையில் பிணமாக இருந்தார். மூவரின் உடலையும் மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொனவர்களில் பாபு திங்கட்கிழமை வீட்டின் வாடகைக்கான தொகையை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் 2 நாட்கள் வீட்டில் எவ்வித நடமாட்டமும் இல்லை என்பது உறுதியானது.
இதனால் இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையே தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உஷா கடந்த சில நாட்களாவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்துகொண்டாரா? உஷாவின் உடலில் பெரிய நோய் ஏற்பட்டு வருத்தத்தில் விபரீத முடிவு எடுத்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.