மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குமரி மாவட்டத்தில் காதலை நிராகரித்த மாணவிக்கு அரிவாள் வெட்டு... காதலன் எடுத்த விபரீத முடிவு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் காதலி தன்னை நிராகரிக்க தொடங்கியதால் ஆத்திரமடைந்த காதலன் அவரை வெட்டி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கல்லுத் தொட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விர்ஜின் ஜோஸ்வா. இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார். இவர் கல்லூரியில் படித்த போது மடிச்சல் பகுதியைச் சார்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் இவரை காதலித்திருக்கிறார்.
இளங்கலை படிப்பை முடித்ததும் அந்த மாணவி பிஎட் படித்திருக்கிறார். ஜோஸ்வா அதன் பிறகு படிப்பை நிறுத்தி விட்டார். இந்நிலையில் அந்த மாணவி இவரது காதலை நிராகரித்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவருக்கு கொடுத்த லேப்டாப் ஒன்றையும் திரும்ப கேட்டிருக்கிறார். மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு வந்தால் லேப்டாப்பை தருவதாக கூறியிருக்கிறார் ஜோஸ்வா. இதனை நம்பி அந்த மாணவியும் வந்துள்ளார்.
அந்த மாணவியிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று கூறி அவரை பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். உதயனூர் குளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த வாளால் சாராமாறியாக அந்த பெண்ணை வெட்டி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி மயங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாக நினைத்து பைக்கில் தப்பி இருக்கிறார் விர்ஜின் ஜோஸ்வா. அப்பகுதியில் உள்ள மக்களால் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அந்த மாணவிக்கு தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற ஜோஸ்வா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.