மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழையானது பெய்து வருகிறது. நேற்று காலை பெய்த மழையினால், மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.