#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigNews: பள்ளி மாணவிகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சி.. அரசுப்பள்ளி ஆசிரியை பகீர் செயல்.! வாக்குமூல வீடியோ வைரல்.!!
அரசுப்பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் தையல் ஆசிரியை, இந்து மாணவிகளை குறிவைத்து மதமாற்றம் செய்ய முயற்சித்துள்ளார். ஆசிரியை கிறுத்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், மாணவிகளிடையே கிறுத்துவ கொள்கையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பேசுகையில், "சம்பந்தப்பட்ட ஆசிரியை தனது வகுப்பு நேரங்களில் மதமாற்றம் செய்வது தொடர்பாக பேசுகிறார். கர்த்தர் பெரிய ஆளு., பைபிள் படிக்க வேண்டும். பகவத் கீதை கெட்டது. பப்பில் நல்லது. அதனை படிக்கச் வேண்டும் என்று கூறுகிறார்.
ஆசிரியை பிலாட்ரிஸ் தங்கம் என்ற ஆசிரியை, பல வகுப்பறைகளில் மதமாற்றம் தொடர்பாக பேசி வருகிறார். வகுப்பறை நேரத்திலும் இயேசு பிரார்த்தனை தொடர்பாக கூறுகிறார். இந்து மக்களை சாத்தான் என்றும் குறிப்பிடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவியிடம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் நேற்று மாணவி பதிவு செய்த வாக்குமூல வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. விசாரணை செய்கையில், ஆசிரியை கிறுத்துவ மத போதனைகளை மாணவிகளிடையே பரப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.