மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோழி என நம்பி, தனது குளியல் வீடியோவை அனுப்பிய பெண்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..! பெண்களே உஷார்.!!
23 வயது இளம்பெண் தோழிக்கு தனது குளியல் வீடியோவை பகிர்ந்த நிலையில், அந்த தோழி தனது ஆண் நண்பருக்கு பகிர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை பிரச்சனை ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகேயிருக்கும் கிராமத்தை சார்ந்த 23 வயது பெண்மணி, தான் குளிப்பதை செல்போனில் படம்பிடித்து இருக்கிறார். இதனை அறிந்த அவரின் தோழி வீடியோவை அனுப்ப கூறி கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து, 23 வயது பெண்மணி தனது தோழியான சுவீட்டி என்பவருக்கு குளியல் வீடியோவை அனுப்பி வைத்த நிலையில், அவர் தனது ஆண் நண்பரான மிடலாம் பகுதியை சார்ந்த சூசையா என்பவரின் மகன் ஜோக்ஸனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
23 வயது இளம்பெண்ணின் குளியல் வீடியோவை பார்த்த ஜோக்ஸனும், தனது நண்பர்கள் சிலருக்கு வாட்ஸப்பில் பகிர்ந்து இருக்கிறார். மேலும், அவரை உல்லாசத்திற்கு ஒத்துழைக்க கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, பெண்மணியின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜோக்ஸன், ஸ்வீட்டி உட்பட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் தங்களின் அந்தரங்க பகுதிகள் மற்றும் தனிமை நிகழ்வுகளை வீடியோ எடுத்து தோழி என நம்பி அனுப்பினாலும் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.