மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியாக நடந்து செல்லும் பெண்கள் டார்கெட்... 2 கயவர்கள் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்.!
பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு, மார்த்தாண்டம் துறை பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவர் மீன்பிடி தொழிலாளி ஆவார். இவரின் மனைவி ஜெண்ட் (வயது 38). இவர் பாலவிளை சரக்குளம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். நேற்று காலை கடையில் பொருள் வாங்க வெளியே சென்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தி முனையில் ஜெனட்டிடம் வழிப்பறியில் ஈடுபட்டு ரூ.500 பறித்துள்ளனர். நகையை பறிக்க முயற்சித்தபோது, அவரின் அலறல் சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் திரண்டதால் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கொல்லங்கோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், நேற்றைய இரவில் நடைக்காவு பகுதியில் சுற்றிவந்த இளைஞர்களை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தும்போது, இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது உறுதியானது.
கஞ்சாங்குடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26), கச்சேரிநடை பகுதியை சேர்ந்த அனிஷ் (வயது 29) ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களின் மீது பல காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தொடர் திருட்டு செயல்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் பெண்களை குறிவைத்தே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.