மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை போராடி கரம்பிடித்த காதலி.. மும்பையில் இருந்து குமரி விரைந்த காதலன்.. பெற்றோர்கள் எதிர்ப்பால் பரபரப்பு சம்பவம்.!
தான் உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளைஞனை பெற்றோரை எதிர்த்து மென்பொறியாளர் கரம்பிடித்த நிகழ்வு கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம், பெருமணல் பகுதியை சேர்ந்தவர் போஸ்கொ. இவரின் மகள் அந்தோணி சபிதா (வயது 24). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த கணேசன் எனப்வரின் மகன் பார்த்தசாரதியும் (வயது 29) பணியாற்றி வந்துள்ளனர்.
அங்கு சபிதா - பார்த்தசாரதி இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், பார்த்தசாரதி பணி மாறுதல் காரணமாக மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். அவ்வப்போது தனது காதலியிடமும் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆதார் கார்டு முகவரியை அந்தோணி சபிதா காதலனின் மும்பை முகவரிக்கு மாற்றம் செய்யவே, இந்த தகவலை அறிந்த சபிதாவின் பெற்றோர் மகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குவாரியில் இருக்கும் உறவினரின் வீட்டிலும் தங்க வைத்துள்ளனர். தனக்கு எதோ நடக்கவிருப்பதாக அஞ்சிய அந்தோணி சபிதா உறவினரின் உதவியுடன் பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்து உவரி வந்த பார்த்தசாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்தோணி சபிதா தனது காதல் விவகாரத்தை தெரிவித்து, அவரைத்தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார். இதன்பின் அதிகாரிகள் அவரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. ஆதலால், அவர் காதலருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.