மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்... காதலி ஏமாற்றியதால் வீடியோ வெளியிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு... கன்னியாகுமரியில் பரபரப்பு!!
கன்னியாகுமரி மாவட்டம் குதிரைபந்தி விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார்(31). தாய்,தந்தையை இழந்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக காரங்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சதிஷ் குமார் வெளிநாடு செல்ல முடிவெடுத்து தனது வீட்டு ஆவணங்கள் மற்றும் நகைகளை காதலியிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து காதலிக்கு பணமும் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் காதலி சதிஷ் குமாருக்கு போன் செய்து தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளதாக கூறி உடனே ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனையடுத்து விரைந்து வந்த சதிஷ் குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காதலியின் தாயிடம் இது குறித்து கேட்ட போது தங்களது மகளுக்கு வேறு ஒரு நல்ல இடத்தில் வரன் பார்த்துள்ளதாகவும் இனிமேல் அவளிடம் பேச வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சதிஷ் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னிடமிருந்து பெற்ற சொத்து ஆபரணங்கள் மற்றும் நகைகளை திரும்ப கேட்டுள்ளார். தர மறுத்ததை அடுத்து இது குறித்து சதீஷ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த சதிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு காரணம் சதிஷ்ன் காதலி மற்றும் குடும்பத்தினர் தான் என சதீஷ் குமாரின் அக்கா பாத்திமா ராணி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சதிஷ் குமாரின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சதிஷ் பேசிய வீடியோ பதிவு ஒன்று சிக்கியுள்ளது. அதில் காதலியின் குடும்பத்தினர் தன்னை ஏமாற்றியது முதல் தாக்கிய நிகழ்வுகள் வரை உருக்கமாக வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
அதனை வைத்து போலீசார் காதலி, காதலியின் தாய், காதலியின் தம்பி மற்றும் நிச்சயம் செய்யப்பட்ட நபரின் தம்பி போன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.