மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டினி கிடந்து வாங்கப்பட்ட விலையுயர்ந்த பைக்; ஆசை நிறைவேறி அனுபவிப்பதற்குள் விபத்தில் சிக்கி இளைஞர் மரணம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரின் மகன் ரோஹன் (வயது 19). இவர் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, மணல் ஆலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரோகனின் வீட்டிற்கு, அவரது நண்பர்கள் சென்று இருக்கின்றனர். அப்போது, தான் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்ட உடையார்விளை பகுதிக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரோகனின் நண்பர் புதிய இருசக்கர வாகனத்தில் செல்ல, மற்றொரு வாகனத்தில் ரோகன் மற்றும் அவரின் உறவினர் அஸ்வின் (வயது 19) ஆகியோர் சென்றனர்.
இவர்கள் லட்சுமிபுரம் சந்திப்பு பகுதியில் செல்கையில், இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் முன்னாள் சென்றவர்களின் மீது மோதாமல் இருக்க ரோகன் இருசக்கர வாகனத்தை சாலையோரம் திருப்பி இருக்கிறார்.
அச்சமயம் கட்டுப்பாட்டினை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள் பாய்ந்து, ரோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 ஆண்டுகளாக பெற்றோரிடம் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் கேட்டு அடம்பிடித்து வந்த ரோகன், நான்கு நாட்கள் உண்ணாநிலை விரதம் மேற்கொண்டு இருசக்கர வாகனத்தை வாங்கி இருக்கிறார்.